கடைக்காரனுக்காக தக்காளி விஞானம்..
"வீட்டிலேயே இருக்குற கூர்மையான கத்திய வச்சி நறுக்கறேன், இருந்தாலும் இந்த தக்காளி தோலு அப்படியே leather மாதிரி வழுக்குது", வீட்டுக் காரம்மா மீண்டும் இன்று கடையில் வாங்கும் தக்காளி குறித்து குமுறிக் கொண்டிருந்தார்.
கரோனா காலத்தில் பக்கத்து கோலனி இயற்கை அங்காடி போய் காய் வாங்க முடியவில்லை என்பதால், அருகாமயில் இருக்கும் கடையில் மிகவும் சிவப்பாக இருக்கும் "நாட்டு தக்காளி" நான் lockdown ஆரம்பிக்கும் முன்னர் ஒரு வாரத்திற்கு சேர்ந்து வாங்கி வந்தது நினைவுக்கு வந்தது. முன்பெல்லாம் ''நாட்டு தக்காளி'' கொஞ்சம் மட்டமான சிவப்பில், பசுமையும் மஞ்சளும் சேர்ந்து இருக்கும், புளிப்பு அதிகமாக இருக்கும், காய் கொஞ்சம் சிறிதாக இருக்கும். இதற்கு மாறாக ''பெங்களூரு'' தக்காளி எல்லாம் ஒரே மாதிரி குண்டாகவும், அதிக சிவப்பாகவும், தோல் பருமாநாகவும் இருக்கும். இப்போதெல்லாம் ரெண்டும் ''பெங்களூரு'' தக்காளி போலத்தான் இருக்கு. விதியாசமே தெரியல.
கடந்த சில நாட்களாக வீட்டில் இந்த தக்காளி பேச்சு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. "மூணு விசில் விட்டும் தக்காளி வேகவே மாட்டேங்குது" என்று பாட்டி 2 நாட்களுக்கு முன்னர் கூறினார். "அப்பா, இந்த தக்காளி எந்த ஒரு டேஸ்ட்உம் இல்லை" என்று உதட்டதை பிதுக்கி கொண்டு மகள் கூறியது.. அப்பாவிற்கு ஃபோன் போட்டு சாயங்காலம் பேசும்போது சில மாதங்களுக்கு முன்னரே ஒரு முறை அவர் கூறினார், "இப்போ எல்லாம் தக்காளி என்னால் கடிக்க முடியல்ல, நல்லா வெந்ததுக்கூட ஏதோ சவுக்கு சவுக்குன்னு சாப்பிடவே முடியல்ல, அதோடய தோல் ஏதோ ரப்பர் மாதிரி இருக்கு" என்றார்.
ஒரு வருடத்திரக்கு முன்னர் விதைகளில், வீரிய ராகங்கள் உற்பத்தி செய்யும் அரசாங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு விஞானி யிடம் பேசியது நினைவிர்க்கு வந்தது. எப்படி இப்போதுள்ள புதிய தக்காளி வகைகள் எல்லாம் நீண்ட நாள்கேட்டு விடாமல் இருக்கின்றன என்பதை அவர் மிகவும் பெருமையாக கூறினார். ''ஆனால் சுவை குறைஞ்சு போச்சு இல்லயா?'' நான் கேட்ட கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்ல வில்லை. ''விவசாயிக்கு சீக்கிரமா கெடாம இருந்தா, ஒரு நாள் ரெண்டு நாள் வெச்சிருந்து விற்கலாம், அவர்கள் வருமானம் பெருகும்'', இதை அவர் எந்த அளவிர்க்கு நம்பினார் என்று அவர் கூறும்போதே எனக்கு சந்தேகம் இருந்தது. பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு அறுவடை செய்துவிட்டால் எவ்வளவு விரைவாக அதனை காசாக்கலாம் என்பது தான் குறியாக இருக்கிறது. எங்களது தோட்டதை சுற்றி உள்ள பல தோட்டங்களில் தக்காளி உற்பத்தி செய்கிறார்கள். பக்கதில் உள்ள தலைவாசல் சந்தையில் விற்பனை ஆகிய வில்லை என்றால், யாரும் அந்த தக்காளியை மீண்டும் குளிர்சாதன அறைக்கோ, அடுத்தநாள் விற்பனைக்கோ, அல்லது மீண்டும் வீட்டிற்கோ எடுத்து வருவது இல்லை. சந்தையிலேயே ஒரு மூலையில் கொட்டி விட்டு வீடு வருவதுதான் வழக்கம். கடையில் விற்பனை ஆகாத தக்காளி அடுத்த நாள் கெடாமல் இருந்தால், கடைக்காரருக்குத்தான் வருமானம். இந்த தொழில்நுட்ப புதிய ரக தக்காளி பெரும்பாலும் அந்த கடைக்காரருக்குத்தான் லாபத்தை கூட்டும். ஆகிய மொத்தம் நாட்டிற்கு உழைக்க ஊதியம் பெரும் விஞானி பெரும்பாலும் கடைக்காரருக்குத்தான் உழைக்கிறான்.
அந்த விஞானியிடம் மேலும் பேசும்போது, நான் நாட்டு தக்காளியை சுவை மிகுந்தது என்று கூறி, அத்துடன் எப்படி அதன் colour கொஞ்சம் மட்டமாக இருக்கும் என்று கூறியதற்கு அவர், ''ஆமாம் இப்போ நாட்டு தக்காளி போலவே, புதிய ராகத்திலும், தக்காளி ஷோல்டர்இல் கொஞ்சமாக பசுமை இருக்கிறா மாதிரி ஒரு ராகம் கூட உருவாக்கியிருக்கோம்'' என்றார்! அவர் கூறியதை வைத்து பார்த்தால்,இந்த பொருளை விற்கும் கடைக்காரர் வாடிக்கையாளரை ஏமாற்றுவதற்கு இவர் வேலை செய்கிறார் என்றே எனக்கு தோன்றியது.
இவரைக்கொண்டு அனைத்து விஞானிகளை எடை போடுவது தவறு தான் ஆனால். வணிகததுக்கும், வியாபாரிக்கு தான் இந்த விஞானிகள் வேலை செய்கிறார்கள் என்னும் கருத்து என்னுள் ஒவ்வாறுமுறையும் இவர்களைபோல் மனிதர்களை சந்திக்கும்போது மேலும் வலுப்பெறுகிறது.
Comments