காந்தியை அறிதல் - தரம்பால் (book release in Tamizh, 'Gandhiyai Aridhal' by Dharampal - a short report)

காந்தியை அறிதல் - தரம்பால்
புத்தக வெளியிட்டு விழா, மதுரை
05/06/2010
'Understanding Gandhi' , சிந்தனையாளர் தரம்பால் அவர்களின் காந்தியை பற்றிய கட்டுரைகளின் ஒரு தொகுப்பு. இந்த கட்டுரைகள், காந்திய சிந்தனையை அறிவதற்கு ஒரு நல்ல அறிமுகமாக விளங்கும். திரு. தரம்பால் தன்னை ஒரு காந்திய காலத்து குழந்தையாகவே கண்டார், இந்த புத்தகத்தின் முதல் பாகத்தில், அப்படியே எழுதியும் உள்ளார். எதை தொடர்ந்து, ஆறு கட்டுரைகள் காந்தியை அவர் புரிந்துகொண்ட விதத்தை மட்டுமல்லாமல், தற்கால தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி குறித்த விவாதங்களுக்கு  அவசியமான பல எண்ணங்களையும் பகிர்துகொண்டுளார்.

காந்தி எழுதிய, 'இந்திய சுயராஜ்யம்' அவர்களின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் புரிந்துகொள்ள மிகவும் அவசியமான் ஒரு புத்தகமாக தரம்பால் எப்போதும் கூறுவார். தமிழகத்தில் பல 'காந்தியவாதிகள்' இந்த புத்தகத்தை வாசித்ததில்லை...ஏனோ அதில் கூறியிருக்கும் பல சிந்தனைகளின் literal அளவிலிருந்து, அதன் உள்கருத்துக்களை புரிந்துகொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தை அவர் கடுமையாக சாடுவதை விரும்பாத பலரும், இந்த புத்தகத்தை படிக்கவும், விவாதிக்கவும் தயங்குவதுண்டு. இந்த புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை பற்றியும், அதன் முக்கியத்தையும் உணர்த்தும் விதத்தில் எழுதபட்டுள்ளது.

இந்திய சுயரஜ்யதில் மற்றுமொரு விஷயத்தை அவர் கடுமையாக சாடுவது modernity மற்றும் technology, அதாவது நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம். இதனை குறித்த அவர் சிந்தனைகளையும், பலருடன் நடந்த விவாதங்களையும் தொகுத்து அடுத்த கட்டுரை எழுதபட்டுள்ளது.

காந்தியின் வாழ்க்கை பற்றியும், அவர்களின் எழுத்து தொகுப்பான Collected Works of Mahatma Gandhi, பற்றியும் இதர கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. இந்த கட்டுரை தொகுப்பின் கடைசி கட்டுரை, காந்தி பலகாலம் வாழ்ந்த, தரம்பாலும் பல காலம் வாழ்ந்து இறந்த சேவாக்ராம் ஆஸ்ரமம் குறித்து மிகவும் வேதனையுடன் எழுதப்பட்ட ஒரு நேர்காணல்.

ஆங்கிலத்தில் இந்த கட்டுரைதொகுப்பை, Other India Press வெளியிட்டது. இதனை தொகுத்தவர்கள், கிளாடு அல்வரீஸ் மற்றும் நார்மா அல்வரீஸ் ஆவர். இந்த கட்டுரை தொகுப்பை தமிழில் ஜெனகப்ரியன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். தரம்பலின் நீண்டநாள் நண்பரும் எழுத்தாளருமான G S R கிருஷ்ணன் அவர்கள் உதவிபுரிந்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

மதுரையை அடுத்துள்ள CESCI வளாகத்தால் ஏற்பாடு செயபட்ட இந்த நிகழ்ச்சியில், கிளாடு அல்வரீஸ் தலைமையில் இந்த நூலை கிருஷ்ணன் வெளியிட்டார்.

Comments

Popular Posts