Post TN Election Reflections...

தேர்தலுக்குப்பின் தமிழக அரசியல்...

இந்த முறை, தமிழக வாக்குபதிவு எப்போதும் இருப்பதை விட அதிகமாக இருப்பது அனைவரையும் (முக்கியமாக திராவிட கட்சிகளை), கொஞ்சம் சிந்திக்கவும், 'இவர்கள் என்னதான் செய்திருப்பார்கள்?' என்று சந்தேகிக்கவும் செய்துள்ளது. 

"between the devil and the deep sea" என்பார்கள், பெரும்பாலும் தமிழர்கள் எந்த ஒரு கட்சிக்கும், அந்த கட்சியின் கொள்கைகளை ஆமோதிக்கும் விதத்திலோ, அல்லது, அதிலுள்ள தலைவர்களின்பால் இருக்கும் நம்பிக்கையின் பேரிலோ வோட்டு போடவில்லை. பிறகு இவ்வளவு பெரிய அளவில் வோட்டு போட வேண்டிய அவசியம் என்ன?

25000 பேர் 49O போட்டிருப்பது, இந்தியாவிலேயே முதல்முறையாக என்று நினைக்கிறேன். இதுவும், தமிழரின் ஒரு எதிர்ப்பை குறிக்கிறது. 

யார் வெல்வார்கள்? யார் தோற்பார்கள்? இதுதான் அனைவரின் உள்ளத்திலும் தோன்றும் கேள்வி. 

எனக்கென்னவோ, வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தும், அவரின் பொதுவாழ்வின் backgroundஐ பார்த்தும் தான் பெரும்பாலான வாக்காளர்கள் வக்களிதுள்ளர்கள் என்று தோன்றுகிறது. எங்கெல்லாம் தொழில் சார்ந்த தொகுதிகள் இருந்தனவோ, அங்கெல்லாம், ஜாதி அடிப்படையிலும், வேட்பாளரின் usefulness ஐ சார்ந்தும் வோட்டுக்கள் விழுந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

பல கருத்து கணிப்புக்கள், ஆ தி மு க கூட்டணி வெற்றி பெரும் என்று கூறுகின்றன. வாக்கு பதித்துவிட்டு வெளிய வந்த ஜெயலலிதாவே, "மக்கள் ஒரு  மாற்று ஆட்சியை தான் விரும்புகிறார்கள்" என்று கூறினாரே தவிர, "அவர்கள் எனக்குதான் வாக்களிப்பார்கள்" என்று கூறவில்லை.  கலைஞரும், பல நாட்களாகவே, "திரை துறை வேலை தான் நிரந்தரமானது", என்றும், டில்லிக்கு எதிராக சில அறிக்கைகளை சூசகமாக வெளியிட்டும், "தோல்வி வந்தால் என்ன சொல்லலாம்" என்பதற்கு தயாராகி வருவது தெரிகிறது.

ஆனால், இந்த முறை, அவ்வளவு சுலபமாக ஒரு தனிப்பட்ட மெஜாரிட்டி அரசு வரும் என்று விஷயம் தெரிந்த யாரும் எதிர்பார்கவில்லை. இரண்டு விஷயங்களில் அனைவரும் தப்பு கணக்கு போட்டுருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. முக்கியமாக கலைஞர், மிகப்பெரிய தப்பு செய்துள்ளார் என்று நான் கருதுகிறேன்.

ஒன்று - இலங்கை தமிழர்கள் விஷயத்தில், தமிழகம் முழுவதும் பரவியுள்ள கோபத்தை, தமிழக அரசியல் வாதிகள் குறைத்து மதிபிட்டுவிடார்கள் என்றே நான் நினைக்கிறேன். முக்கியமாக இளைஞர் மத்தியில் இது ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானுக்கு கூடிய கூட்டத்தை கண்டும் இவர்களுக்கு இந்த விஷயம் உரைக்காதது ஆச்சிரியமே.  ஆனால், இது ஒரு கண்மூடித்தமான கோபம் இல்லை. கடந்த காலங்களை போல, இந்த கோபத்தை பயன்படுத்தி தனிநபர் முன்னிற்க முயற்சித்தால், அது தோல்வியே அடையும். இன்றைய தமிழக இளைஞர் ஒரு engineer ஆகவோ, படித்த, படிக்கவிழையும், ஒரு மாணவ, மாணவியாகவோ உள்ளனர். இவர்களை வெறுமனே வார்த்தை ஜாலம் காட்டி முன்னொரு காலத்தில் ஏமாற்றியதை போல ஏமாற்றலாம் என்று எனக்கு தோன்றவில்லை. இன்றைய தமிழக இளைஞர்கள், global exposure அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு உலக விஷயங்களில் அக்கறை ஒரேவிதமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தெரியாமல் இல்லை என்பதே நான் நினைக்கிறேன். கலைஞர்களின் ஆட்சி நீங்கினாலும், இந்த இளைஞர்களின் மத்தியில் உள்ள கோபம் ஆறாது, எந்த ஆட்சி வந்தாலும், இலங்கையில் ஒரு வலுவான தமிழர் பாதுகாப்பு சூழல் உருவாகும் வரை, இந்த கோபம் தமிழ்நாட்டிலே இருந்துகொண்டே இருக்கும். 

இரண்டாவாதாக, 2G Spectrum தமிழர்களுக்கு உலக அளவில் ஏற்படுத்தியுள்ள அவப்பெயர். கலைஞர் இந்த அவைப்பெயரை தினம் தினம் பார்க்காமல் இருக்கலாம், ஆனால், இந்திய அளவிலும், உலக அளவிலும் தனிழனை கண்டாலே, சிரிக்கசெய்த, அவமானம் 2G ஊழலும், அந்த ஊழலின் முக்கிய பாத்திரம் வகித்த வர்களே சாரும். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், இந்த பாதிப்பு நிச்சியமாக, வாக்களிப்பை பாதித்திருக்கும் என்று தோன்றுகிறது. 

நவீன விதத்திலும், மிக வித்தியாசமான முறையிலும் வாக்காளர்களை பணம் கொடுத்து அவமானபடுத்த பல முயற்சிகள் தொடர்ந்து, வாக்களிக்கும் நாள் வரை  நடந்து கொண்டே இருந்தது.  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்தவர்களின் முக்கிய நோக்கம், எப்பாதும்  பணம் வாங்கி வோட்டு போடுபவர்களுக்காக இல்லை, மறுக்க முடியாத விதத்தில் பணம் கொடுத்து, மக்களை தர்ம சங்கடத்தில் நிறுத்தி, அவர்களை பயமுறுத்தி வோட்டு வசூல் செய்ய முடியவில்லையே என்பதில் தான். அந்த விதத்தில், ஆணையத்தின் வேலை, மிக பாராட்ட தக்கது. பெருமை படக் கூடியது, நிச்சியமாக வரவேற்க தக்கது. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களும், மக்களுக்கு விழிப்புணirvu  ஏற்படுத்த கொண்ட முயற்சிகள் ஏராளம். நிச்சியமாக இவை அனைத்தும், தமிழக அரசியலின்  தற்போதிய  அவல  நிலையை  மக்கள் ஏற்க்க  மறுப்பதையும்,  தங்களால்  ஆனா  மாற்றத்தை  தங்கள்  சுய  முயற்சியால்  ஏற்படுத்த முனைவதயுமே  காட்டுகிறது. 

தமிழக அரசியல் இப்போதை விட கீழே  செல்ல  இனிமேலும்  வாய்ப்பில்லை  என்றே தோன்றுகிறது. வரும் நாட்களில், கட்சிகளின்  மத்தியில், கொடுக்கல்  வாங்கல்   இருக்கலாம்...ஆட்சி அமைத்தே  ஆகவேண்டும்  என்ற  வெறியில்,  பலரை  விலைக்கும், சிலரை  வன்முறை  காட்டியும் கீழ்பணிய  செய்வதற்கு  வாய்ப்பு  உள்ளது. ஆனால், இவர்களில் மத்தியில், தங்கள் "தனிவாழ்வின் போக்கை வைத்தே மக்கள் வோட்டளிதுள்ளார்கள்" என்கின்ற பயமும், அதனால், மானம் போகாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சிலருக்கேனும் தோன்றும் என்று நம்புகிறேன். அப்படி பட்டவர்கள் தனியாக கட்சிகள் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது, கழகங்கள் இரண்டும் உடைய வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கலாம். அல்லது, உள்ளுக்குள்ளே இருக்கும் சில நல்லவர்கள் (!) கழகங்களையும் மாற்றலாம்...எப்படியானாலும், இப்போதுள்ள தலைவர்களை சவால்விடும் அளவில், இவர்களை விட நிச்சியமாக இளைய, நல்ல  புதிய பல தலைவர்கள் உருவாகும் சுழல் விரைவில் ஏற்படும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.

தமிழக வரலாற்றில், இந்த தேர்தல் மிக முக்கியமானதாக நான் நினைக்கிறேன். பழைய மாவை ஆட்டுபவர்கள் அதிகம் இருந்தாலும், தங்களுக்க தேவையான வர்களை எப்படியாவது தேர்தெடுக்க மக்கள் செய்த மிகப்பெரிய முயற்சியாக இந்த தேர்தலை நான் பார்கிறேன். 

தமிழகத்தில் பெரும்பாலான பேர், தானும் தனது குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் விரும்பவில்லை என்றும், இலவசமாக எதை கொடுத்தாலும் வாங்கிகொள்ளுவார்கள், என்றும் சிந்திக்கும் கூட்டம் விரைவில், அப்படி வாங்குபவர்கள், சமுதாயத்தில், மரியாதையோ, மக்கள் மத்தியில் செல்வாக்கோ இல்லாதவர்கள் என்றும், பெரும்பாலும், இவர்களின் ஆட்சியின் பிடியில் சிக்கி, குடிகாரராகவும், உழல்வாதியாகவும், வழி-இழந்து, வாழ்விழந்து உள்ளவர்களே என்று விரைவில் அறிவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

எந்து ஆட்சி வந்தாலும், மக்கள் விழிதுவிடார்கள் என்கின்ற சிந்தனையை ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து உணர்தவேண்டியது, சமூக ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஒரு மிக முக்கியமான கடமையாக உள்ளது. அண்ணா ஹஜாரே போன்ற வர்களின் முயற்சிகள் தமிழகம் முழுவதும் பலரையும் ஊக்குவிதுள்ளது என்பது உண்மை. 

Comments

Popular Posts