எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?


நீங்கள் ஏன் தோற்றீர்கள்? என்ற கேள்விக்கு, 'சில பர்ப்பநியர்களினால்' என்று பதிலளித்து, தனது ஐம்பது ஆண்டு அரைத்து புளித்த மாவை மீண்டும் அறைக்க முயன்றுள்ளார் கலைஞர். இவருடைய புளித்து போன இந்த வார்த்தைகளை இவருக்கு சேவகம் செய்த காக்காய் கூட்டம் கூட நம்பத்தயாராக இல்லை. 

 பெரியவருக்கு நிருபர்களை கண்டாலே பற்றிக்கொண்டு வருகிறது இப்போதேல்லாம். ஆனால் பழக்க தோஷத்தால், அவர்களை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு சமீப காலமாக, கேள்வி வார்த்தைகளை திரித்தும், நிருபர்களை ஏசியும், மறு கேள்வி கேட்டும் விடை அளிக்கிறார். சுற்றியுள்ளவர்கள், கட்சியின் நலனை கருதி, இவரை இனிமேலும் பொது இடங்களில் அனுமதிக்காமல் பாதுகாப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது, இன்றியமையாதது. செய்யும் தைரியம் கழகத்தில் யாருக்கேனும் இருக்குமா?

Comments

Popular Posts