தமிழக விவசாயம் எதிர்காலம் 1 - பாருக்குள்ளே நல்லநாடா அல்லது, பழையது பேசி பின்னிலை நாடா?



இயற்க்கை விவசாய யுக்திகள் தான் உலகத்தில் நிலைத்த நீடித்த பொருளாதரத்திற்கு உகந்தது என்று, UNCTAD அறிக்கை சமீபத்தில் வெளியானது தெரிவித்தது. ஐ.நா. வின் ஒரு நிறுவனம், இத்தகைய ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும், வளர்ச்சி மற்றும் வணிகத்தை முன்னிறுத்தி உள்ள ஒரு ஐ. நா. நிறுவனம் இத்தகைய கருத்தை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அத்தகைய அனைத்து நிரிவனங்கலுமே, மேற்கத்திய பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் அவ்வளவு சுலபமாக வெளியிடாது என்கிற கருத்து அனைவரும் அறிந்ததே. இந்த அறிக்கை மற்றும் இதனுடன் கூடிய ஆய்வு, மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரிய மனமாற்றத்தை குறிக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில், CODEX என்னும் பன்னாட்டு உணவு பாதுகாப்பிற்க்கான கூட்டு நிறுவனத்தில், நீண்டநாளாக ஒப்புக்கொள்ளபடாத ஒரு சட்ட மாற்றம், ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. இதையும் நாம் அறிவது முக்கியம். மரபீனி மாற்று விதிகளை கொண்டு உற்பத்தி ஆகும் பொருட்களை, "எவை மரபீனி மாற்றம் பொருட்களை கொண்டு தயார் செய்தோம்", என்று சிகரெட் பெட்டியில் உள்ளதைபோலே ஒரு எச்சரிக்கை இருக்கவேண்டும், என்று பல நாடுகள் கோரியும், அமேரிக்கா இதுவரை அத்தகைய எச்சரிக்கை எந்த உதவியும் செய்யாது என்று கூறி, அத்தகைய முயற்ச்சியை எதிர்த்து வந்தது. இப்போது, அந்த நாடே முன்வந்து அத்தகைய எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பா நாடுகளில், பெரும்பாலவற்றில், மரபீனி மற்று விதிகளை கொண்டு தயாராகும் உணவு பொருட்களை தடை செய்துள்ளது, மக்கள் அவற்றை பயன் படுத்த எதிர்ப்பது நீண்ட நாட்களாக நடந்துவரும் ஒரு நிகழ்வு. 
"வளர்த்த நாடுகள்" என்று கூறப்படும் நாடுகளின் நிலை இவ்வாறு மாறுகின்ற நிலை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், பொலிவியா போன்ற "வளரும் நாடுகள்" சுற்றுப்புற சூழலுக்காக மாற்றிவரும் தேசிய அளவிலான திட்டங்கள் பெருமையாகவும், வியக்கும் விததில்லும் உள்ளது. என்ன செய்துளார்கள் அப்படி இந்த பொலிவியா மக்கள்? மரங்களுக்கு, வனங்களுக்கும், நீர்நிலை போன்ற ஆதாரங்களுக்கும், மனித உயிருக்கு சமமான உரிமையளிதுள்ளது. இதனால், மனிதனுக்கு எந்த விதத்தில் அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது என்று நினைக்கின்றோமோ, அதே அளவிற்கு, "தாய் மண்ணின்" உரிமையையும் மனித பேராசைக்காக பறிக்க கூடாது என்று இந்த நாடு சட்டம் இயற்றியுள்ளது.  
இயற்கையை அழித்து ஆக்கம் செய்வோம் என்கிற குறுகிய சிந்தனையிலிருந்து, உலகம் விடுபட்டு, இயற்கையுடன் இனிது ஆக்கம் என்கின்ற தொலைநூகுடன் செயல்பட துவங்கும் காலமாகவே சமீபத்தில் நடந்துள்ள பல முயற்ச்சிகளும் எண்ண தோன்றுகின்றன. 

"ஒரு நிதீஷை போலே", என்று மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகாரை, ஐந்தே வருடங்களில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய நிதிஷ் குமார், சமீபத்தில், தேசிய விதை சட்டத்தை, பன்னாட்டு விதை மற்றும், விளைபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு துணை போகும்  சட்டங்களை பெருமளவு சாடியும், அதற்க்கு மாற்றாக, நமது விவசாயிகள் மத்தியில் இயற்க்கை விவசாய யுக்திகளை பரப்பும், ஒரு புதிய பசுமை புரட்ச்சியை முன்வைத்து உள்ளார். அவர் மாநிலத்தில் மற்றுமல்லாமல், இதர கிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அத்தகைய கொள்கைகளை குறித்து எழுதியும் பேசியும் வருகிறார்.

இந்த காலகட்டத்தில், தமிழக விவசாயத்தின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது...தொடரும்...

Comments

Chitra said…
கண்ணிருந்தும் குருடராய், அறியும் திறன் மறந்த மூடராய் இருப்பதை நினைத்தால் 'நெஞ்சு பொறுக்குதில்லையே'!

Popular Posts