தமிழகம் No. 1
தமிழகம் No. 1
இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் அமையும், என்று நம் புதிய முதல்வர் சமீபத்தில் தெரிவித்தாலோ என்னவோ, நாட்டின் தற்கொலை புள்ளிவிவர கணக்கில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது!!
நாளொன்றுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயியும், பதினான்கு வயதிற்கு உட்பட்ட மாணவனும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதை தவிர சாலை விபத்துகளிலும், இந்தியாவில் அதிக அளவில் விபத்துக்கள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.
பேருந்து மற்றும் கார் விபத்து தமிழகத்திலேயே மிக அதிக அளவில் ஏற்படுகின்றன.
இதெல்லாம் சென்ற வருடத்தின் அகில இந்திய கணக்கெடுப்பில் தெரியவந்தவை. சரி, இவ்வளுவு பேர் நம்மை சுற்றி செதுக்கொண்டிருக்கும்போது, மரதமிழர்களாகிய நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?
செம்மொழி கொண்டாட்டம்
இடைவிடாத டு. ஜி. வசை
காலையில் இலங்கைக்கு எதிராக போர்க்குரல், மாலையில் டாஸ்மாக்கில் தஞ்சம்
இந்தியாவில் அதிகமாக வாகனங்களை வாங்கினோம், விற்றோம்
நமது இயலாமைக்கேல்லாம் டில்லியை வசைபடினோம்
வாழ்க தமிழகம்! வளர்க தமிழனின் வான் நோக்கும் புகழ்!
Comments