நூலகமா அல்லது குழந்தைகள் மருத்துவமனையா?

தமிழகத்தில் குழந்தைகள் நலனுக்காக  ஒரு மாபெரும்  மருத்துவமனை  ஈற்பட  இருப்பதை  ஒரு போதும்  எதிர்க்க  முடியாது. 

ஆனால், அப்படிப்பட்ட  முயற்சி  எந்த  காரணத்தால்  எடுக்கபடுகின்றது  என்று ஆராய்வது  முக்கியமாகின்றது. 

இன்றைய தமிழகத்தில் குழந்தைகள் நல பொது மருத்துவமனைகளின் நிலை தான் என்ன? இவற்றின் பிரச்சனைகள் என்ன? என்று ஆராய்ந்து, அதன் பின்னே புதிய ஒரு மருத்துவமனைக்கான முயற்சி மேற்கொண்டால், நிச்சியமாக வரவேற்கலாம்.

சமீபத்தில், ஒரு தன்னார்வு தொண்டு நிறுவத்தின் உதவியால், தமிழகத்தில் உள்ள நான்கு குழந்தை நலனிற்கான பொது மருத்துவமனைகள் எவ்வாறு இயங்குகின்றன என்று ஆய்வு நடத்தப்பட்டது.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய கண்டுபிடிப்புகள் சிலவற்றை கீழே காண்போம்.
1  குழந்தை நல பொது, இலவச மருதுவமநிகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வேறு எங்கும் செல்லாத நிலையில் தான் வருகின்றனர். (படம் - 1 : எழுபது முதல் தொநூறு சதவிகிதம் பேர், 'இதை தவிர வேறு வழி இல்லை' என்ற நிலையிலேயே அரசு பொது மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்). நகரப்புறங்களில் இது சிறிது குறைவென்றாலும், சென்னை மாநகரத்தில் உள்ள ICH போன்ற அரசு பொது குழந்தை மருத்துவமனைக்கு வரும் பெருபாலானவர்கள், வேறு எங்கும் செல்ல வசதி இல்லாமல் தான் இங்கு வருகின்றனர். வசதி வாய்ப்பு இல்லாததின் காரணத்தில் மாத்திரமே மக்கள் பொது மருத்துவமனைகளுக்கு, தாய் செய் நலம் விரும்பி வருகின்றார்கள்.  இந்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகளினாலோ அல்லது அது எங்கு அமைந்துள்ளது என்கின்ற காரணத்தினாலோ அல்ல.

2 ஊழல் - அப்படி வருகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் மருதுவமைகளில் லஞ்சம் கொடுத்தே சிகிச்சை பெற முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். (படம் - 2 : இந்த ஆய்வில், தங்கள் சிகிச்சை குறித்து கருது தெரிவித்த தாய்மார்களில், சராசரியாக ஐம்பது விழுக்காடுக்கு மேற்பட்டவர்கள் லஞ்சம் கொடுக்காமல் சிகிச்சை தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மற்றும் பதினைது முதல் நாற்பத்திரண்டு விழுக்காடு பேர், தாங்கள் பெருமளவில் ஆவணங்களை புர்திசெய்த பிறகே சிகிச்சை பெற முடிந்து என்று தெரிவித்துள்ளனர்). "ஊழல் இல்லாத பொது மருதுவமைகளே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்", என்கின்ற வகையில் பலரும் கொண்டுள்ள கருத்தை இந்த ஆய்வும் உர்ஜிதபடுதுகின்றது. ஊழலற்ற குழந்தைகள் நல மருத்துவமனை, மக்களுக்கு மிக அவசியம்.

3  வசதிகள் -  சரி இப்படி வருபவர்களுக்கு வசதிகள் எவ்வாறு உள்ளன? என்று பார்த்தால், பெரும்பான்மையான குழந்தைகள் அரசு பொது மருத்துவமனைகளில் குறைந்த அளவு கூட வசதிகள் இல்லை என்பதே உண்மை. (படம் - 3 : மருத்துவமனையின் சுத தமான சுழல், குடி தண்ணீர், கழிப்பறையின் சுத்தம், போன்றவற்றை மதிப்பெண் இட்டால், இவற்றை உபயோகிப்பவர்கள் யாருமே, இந்த குறைந்த பட்ச வசதிகள் உபயிக்கும் தருவாயில் இல்லை என்றே தெரிவிப்பதை அறிகின்றோம்). குறைந்த பட்ச வசதிகள் கூட ஒரு பெண்ணிற்கு தற்போது உள்ள குழந்தைகள் பொது மருதுவமைகளில் கிடைக்காத் நிலையில், இன்னொமொரு மருத்துவமனை எந்த அளவில் உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை, அதற்க்கான அவசியமும் புரியவில்லை. 

இவை பொதுவான வசதிகள் என்றால், மருத்துவ வசதிகள் இல்லாத அவல நிலைய இன்னொரு புறம்.  தமிழகத்தில் ஒரு முக்கியமான (சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள) அரசு பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல துறையில், incubator என்கின்ற ஒரு சாதனத்தை இயக்குவதற்காக இயாலமயினால் நாளுக்கு சில குழந்தைகளை இழந்த நிலையம் உள்ளது. இந்த சாதனம், முன்கூட்டியே பிறந்த பல குழந்தைகளுக்கு உயிர் பிழைப்பதற்கான சாதனமாக விளங்குகின்றது. ஆனால், இதை இயக்குவதற்கு மின்சாரம் அவசியம். தமிழக மின்தடையின் காரணத்தால், சென்ற வருடம், குழந்தைகள் மருத்துவமனையில் back-up generator இல்லாததினால், ஒரு incubator கீழ வைக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வரு மின்தடையின் போதும் மரணத்தை தழுவவேண்டியதானது. இவ்வளவிற்கும், இதற்கான செலவேன்னவோ மிகவும் குறைச்சல் தான். இன்னொமொரு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை கழுவுவதிர்க்கு பாதுகாப்பான தண்ணீர் வசதி இல்லை, சமீபத்தில் (சென்ற வாரத்தில்) இன்னுமொரு பொது குழந்தைகள் மருத்துவமனையில், இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகள், மூச்சுவிடுவதற்கு கஷ்டப்படும் போது உதவும் சாதனம் இல்லாததினால் இறந்துபோனது எந்த பத்திரிகையிலும் வரவில்லை, நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், நான் சென்ற ஒரு அரசு பொது மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்ச பிரிவில், புதிதாக பல சாதனங்கள் வந்திரங்கியும், அவற்றை supply செய்த தனியார் நிறுவனம், install செய்யவில்லை என்ற காரணத்தால், உபயோகிக்காமல் இருதது. கொடுமை என்வென்றால், இவை அனைத்தும் அவசரமான நேரத்திலும், அத்யாவச்யமான விதத்திலும் இருந்து எப்போது வேலைசெய்ய வேண்டிய சாதனங்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில், கர்பிணி பெண்களின் உடலில் தேவையான உட்டச்சதுக்கள் இல்லை என்று அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. அரசால், anemia வை எதிர்த்து வழங்கப்படும் iron tablet விநியோகம் மற்றும் உட்கொள்ளுதல் குறைந்து கொண்டிருக்கின்றது, ஆனால் anemia வின் விகிதம் அதிகரிதுகொண்டிருக்கின்றது. IMR மற்றும் MMR என்று கூறப்படும், சிசு மற்றும் பிறப்பு சமயத்தின் தாய் மரணம் விகிதம், அகில இந்தியாவைவிட குறைந்து இருந்தாலும், அதிகமாகவே உள்ளது. பாரம்பரிய விதத்தில் மக்களிடம் இருந்துவந்த உட்டச்சது மிகுந்த உணவ வகைகளின் உட்கொள்ளுதல் குறைந்து, சத்தில்லா, நஞ்சு நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுதல்லும் இதற்க்கு ஒரு காரணம். இவற்றை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை உள்ள குழந்தை நல மருத்துவமனைகளில்  பலவற்றில் , சரியான  விதத்தில்  பெண்களுக்கு  சரியான  ஆலோசனைகள்  வழங்கபடுவதில்லை  என்பது  உண்மை . இவற்றிற்கு , சரியான  ஆள்பலம் , அவர்களுக்கு  முடிவெடுக்கும்  உரிமை  மற்றும்   சுதந்திரம் , சரியான  சாதனங்கள்  மற்றும்  பயிற்ச்சிகள்  கொடுக்கப்படவில்லை  என்பதும்  உண்மையே . 

தெரிந்தோ, தெரியாமலோ, சென்ற ஆட்சி காலத்திலும் சில நல்ல விஷயங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சொல்வதில் எவரும் குறைந்துவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. பிரச்சனையை என்னவென்றால், தான் செய்த சின்ன சின்ன முயற்ச்சிகளை கூட, பெரிதுபடுத்தி, "தமிழர் உணர்வு", "தமிழர் மரபு", "தமிழர் பண்பாடு", என்று தத்து பித்தென்று தற்புகழ்ச்சி கொள்ளுதல்.  இதற்க்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்பதிற்கு சான்றாக தான், அவரை மக்கள் பதவி இறக்கினார்கள். குழந்தைகள் உடல்நலம் காக்கவும், நல்ல மருத்துவ வசதி அளிக்கவும், இருக்கும் சூழலில், பல குறைபாடுகளை நிவர்திசெய்வதே அன்றி, மென்மேலும் மருத்துவமனைகள் பெரும் செலவில் ஏற்படுதவதன்று.

சென்னையில் உள்ள பொது நூலகங்களில் பலவற்றை உபோயோகிதுள்ள அனுபவத்தில், ஒரு நல்ல நூலகத்திற்கான தேவையை என்னால் உணர முடியும். கன்னிமாரா நூலகம், பழமையானது, பல பொக்கிஷங்கள் இருந்தும், நான் சென்ற காலங்களில், பெரும்பாலோர் செய்தித்தாள் படிப்பதிர்க்கோ அல்லது வெய்யில் தப்பி தூங்குவதிர்க்கோ மாத்திரமே சென்று கொண்டிருந்தனர். அதை சுற்றியிருந்த சூழலில் காதலர்களுக்கு, ஒரு நல்ல சந்திப்பாக விளங்கியது. ஆனால், நூலகத்தில் பழைய புத்தகங்களை வைப்பதிர்க்கும், பராமரிப்பதிர்க்கும் மிக குறைந்த விதத்திலேயே முயற்ச்சிகள் எடுக்கபட்டதேன்னவோ உண்மை. மற்றொரு முக்கியமான நூலகமான அண்ணா சாலையில் உள்ள பாவேந்தர் நூலகத்தில் நிலைமை இன்னமும் மோசம். இங்கு, என்னை போல பலரும், தாங்கள் தொடர்ந்து படிக்கும் புதகங்களுக்கேன்றே தனியாக சில புத்தக அடுக்குகளை 'தனியார் மயமாக்கிகொண்டது' உண்மை. நான் இந்த இரு நூலகங்களுக்கும் சென்று பல   வருடங்கள் ஆகிவிட்டன என்பது உண்மை. சமீப காலங்களில், கன்னிமாரா நூலகம் நன்றாக இயங்குவாதாக சிலர் தெரிவித்தனர். நான் இதுவரை, இந்த புதிய நூலகத்திற்கு சென்றதில்லை. 

தமிழகத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது. மேல் கல்வியில், வெறும் தொழில்நுட்ப படிப்பிற்கு முக்கியத்துவம் தந்து, மற்ற துறைகளை தாழ்ந்ததாக தொடர்ந்து நிலவி வரும் ஒரு பொதுவான போக்கே இதற்க்கு காரணம் என்று எனக்கு தோன்றுகிறது. தொழில்நுட்ப படிப்பில், தமிழிலோ, அல்லது, நூல்கள் மூலமாகவோ, கல்லூரிக்கு வெளியே வேறு ஏதேனும் வாசிக்க வேண்டும் என்கின்ற தேவை இல்லை. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்களை ஊக்குவிப்பதுமில்லை என்றே தோன்றுகிறது. இணையதளத்தின் ஆக்கிரமிப்பும், தொழில்நுட்ப படிப்போர் மததியில் அதிகமிருப்பது ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஒருமுறை முதுநிலை பட்டபடிப்பு முடித்த சில இளைஞர்களுடன் பேசும்போது, தாங்கள் தமிழில் எந்த ஒரு நூலையும் பள்ளி நாட்களுக்கு பின் வாசித்ததில்லை என்றே தெரிய வந்தது. பெரும்பாலானவர்களுக்கு, சினிமாவின் மூலவாகவும், தொலைகாட்சியின் மூலமாக குறைந்துவரும் தமிழ் சொற்கள்தான், மொழிஎன்றே தெரிகின்றது. சாலமன் பாப்பையாவும், நடிகர் வடிவேலுவும் தான் இன்றைய தமிழின் முக்கிய பாதுகாவலர்களாக திகழ்கின்றனர்.

இந்த சூழலி, ஒரு நல்ல நூலகம் உருவாதேன்பது, ஒரு சாதனை என்றே எண்ண தோன்றுகிறது. நிச்சியமாக மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, மீண்டும் நூல்களை வாசிக்க வேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துவதற்கு அத்தகைய நூலகம் உதவும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏற்படுத்திய அத்தகைய நூலகத்தை தேவையில்லா குழந்தை மருத்துவமனையாக மாற்றுதல் என்பது, அரசியல் முடிவே அன்றி அறிவார்த முடிவாக தெரியவில்லை. புதிய முதல்வர் சில நல்ல முயற்சிகளை ஏற்படுதியிள்ளது பாராட்ட தக்கது, மரபணு மாற்றிய விதைகளை அரசு ஊக்குவிக்காது என்கின்ற அறிக்கை, கூடங்குளம் விஷயத்தில் அரசின் நிலை, மீனவர்களின் விஷயத்தில் அரசு காட்டியுள்ள அவசரம் மற்றும் மத்திய அரசிடம் நேருக்கு நேராக பேசும் தோரணை யாவையும் வரவேற்க தக்க விஷயங்கள். முந்திய ஆட்சியில் நடந்த சில நல்ல விஷயனகளை (நூலகம், தொல்காப்பிய பூங்கா போன்ற முயற்ச்சிகள்) தொடர்ந்து ஆமோதிப்பது இந்த அரசிற்கு எந்த விதத்திலும் குறையாகாது என்பதை, முதல்வரும் மற்ற மந்திரிகளும் உணரவேண்டும். 

Comments

Popular Posts