பன்மயத்தை ஆதரியுங்கள்!
குறைந்த நிலத்தில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு, ஊக்க பரிசுதொகை அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்க்கதக்கதே. ஆனால், இப்படி அளிக்கும் ஊக்கதொகை வெறும் நெற்பயிருக்கு மட்டுமல்லாமல், ஒரு காணி நிலத்தில், பல வித பயிர்செய்து அதன்மூலம் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தற்சார்பு ஈட்டும் விவசாயிகளுக்கும் அளித்தால், அதன்மூலம் பன்மையம் பாதுகாக்கப்படும், விவசாயிகளும் பயனடைவர். (இந்த கொள்கையை முன்னிறுத்தி, உழவன் பால எழுதும் "கெடுமுன் கிராமம் சேர்" கட்டுரைகளை, www.kaani.org வலைதளத்தில் காண்க).
நாம், வெறும் விளைச்சல் = உற்பத்தி திறன் என்கின்ற, பின்னோக்கிய industrial revolution சிந்தனையிலிருந்து விடுபட்டு, net nutritional output மற்றும் nutrition security போன்ற முற்போக்கு சிந்தனய்களை கொண்டு நமது வேளாண்மையை அணுகுவது மிகவும் அவசியம். வெறும் சக்கையாக, அதிக அளவில் உற்பத்தி செய்து நெல்லு சோறு சாப்பிட முடியாமல் அவஸ்தை படும் எந்நாட்டு diabetes மக்களுக்கு அளித்து என்ன பயன்? பெருகிவரும் உடல் உபாதைகள் அனைத்தும், நமது வாழ்க்கை முறை மற்றும் அதிவேகமாக மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களினால்தான் என்றான பின்னர், இத்தகைய புதிதாக ஏற்படுத்தக்கூடிய விருதுகள், பழைய mono-culture சிந்தனைகளிலிருந்து விடுபட்டால், விவசாயிகளை ஒரு நல்வழியில் ஊக்கபடுத்தியதாகும்.
-------------------------------------------------
அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா
சென்னை, டிச. 21: அதிக விளைச்சல் காட்டும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Comments