நாளை .விடுமுறை..
தமிழக ஆண்களின் பிரதான வேலையான குடிப்பதற்கு நாளை ஓய்வு. மது பான நாளை நமது தேசிய தந்தை என்று அழைக்கப்படும் காந்தி அடிகளின் பிறந்த தினத்தை ஒட்டி, மூடி இருக்கும். இதன் தாத்பரியம் என்ன என்று விளங்காதவர்களுக்கு - மறந்துவிட்டோம் என்று மகாத்மாவிடம் மன்னிப்பு கேட்கும் பொருட்டு, தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் பிரகடன படுத்தும் ஒரு நிகழ்வு இது.
விடுமுறை கடைகளுக்கு தான், குடிப்பதற்கு அல்ல. இன்றே நிறைய வாங்கி நாளை, வீட்டிலேயோ மற்றும் வெளி இடங்களிலேயோ எப்போதும் போல் குடித்து தங்கள் 'குடி உரிமையை' நிலை நாட்ட எந்த தடையும் இல்லை. நிறைய குடித்து செத்து போனாலும் பரவாயில்லை, தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.
Comments