தமிழக பருத்தி உற்பத்தி - உண்மை நிலை என்ன?

தமிழக பருத்தி உற்பத்தி - உண்மை நிலை என்ன?

நேற்று தமிழக சட்டசபையில், நிதியமைச்சர் திரு. ஓ.. பன்னீர்செல்வம், தேர்தலுக்கு முன்னதாக ஒரு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் மிக முக்கியமாக அவர் தமிழக பருத்தி உற்பத்தி உயர்வதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும், தற்போதய 3.34 லட்சம் ஹெக்டர் நிலபரப்பில் உள்ள பருத்தி உற்பத்தி வரும் ஆண்டு 3.7 லட்சம் ஹெக்டர் வரை உயரும் என்றும், இது மேலும் வரும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் ஹெக்டர் ஆகும், என்றும் தெரிவித்துள்ளார். (செய்தி 1, 2, 3).

ஆனால், கடந்த ஆண்டு, இதே சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் அறிக்கையில், தமிழக பருத்தி உற்பத்தி வெறும் 1.55 லட்சம் ஹெக்டர் அளவுதான் என்று நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது (தமிழக வேளாண் துறை அறிக்கை, 2013-14 இங்கு சொடுக்கவும்). அதற்க்கு பிறகு, இந்த ஆண்டு ஜனவரி வரை நடந்த கொள்முதலும் இந்த அளவிற்கு ஏற்றதாகவே உள்ளதாக தேசிய அளவில் பருத்தி உற்பத்தியை கண்காணிக்கும் நிறுவனமும் தெரிவிக்கின்றது (இங்கு சொடுக்கவும்).

தமிழகத்தில் பருத்தி உற்பத்தியின் உண்மை நிலை என்ன?

எவ்வளவு நிலபரப்பில் பருருதி உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது?

திரு. பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்த நிலைமை ஏன் கடந்த ஆண்டு வேளாண்மை அமைச்சர் தெரிவித்த எண்ணுக்கு முரணாக உள்ளது?

 உண்மை என்ன?
ஏன் இந்த அவசர அறிவிப்பு?

 1.55 லட்சம் ஹெக்டருக்கே எட்டிபிடிக்க தமிழகம் தடுமாறும் போது, இந்தவருடம் தமிழகம் முழுவதும் மழை நிலைமை மோசமாகவும் இருக்கும் நிலையில், நீர் உறிஞ்சும் பீடி பருத்தி, நாடு முழுவதும் பரவலாக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள இன்றைய நிலையில், இந்த "பருத்தி" திட்டம் இவ்வளவு முக்கியமாக அறிவிக்க காரணம் என்ன?

Comments

ram said…
http://www.deccanherald.com/content/386034/bt-cotton-loss-farmers-block.html

Popular Posts