உள்ளாட்சி...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு உயர் அதிகாரி "அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாங்கள் ஏதாவது காரணம் சொல்லி உள்ளாட்சி தேர்தலை தள்ளி போட்டு கொண்டே இருப்போம்!" என்று கூறியபொழுது, நான்கூட கொஞ்சம் நம்பாமல்தான் இருந்தேன்.

ஆனால், தொடர்ந்து வெட்கமில்லாமல் இந்த அரசு நீதிமன்றத்தில், "எங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை, நாற்காலி இல்லை, வேலைசெய்யும் இயந்திரம் பழுதாகிவிட்டது, மூளை துரு பிடித்துவிட்டது, காக்கா ஆய் போனது,...: போன்ற கொஞ்சமும் நம்ப முடியாத காரணங்களை நீதிபதிகள் நம்பும் விதத்தில் கூறி உள்ளாட்சி தேர்தலை தள்ளி போட்டுவருவதை பார்க்கும் பொழுது, அதிகார வர்க்கம் நினைத்தால் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பது உணர முடிகிறது.

சமீபத்தில், "ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் முடிவுகளை நிறைவேற்றுவதுதான் எங்கள் வேலை, அது குறுகியகால அரசியல் நோக்கு கொண்டதாக இருப்பிநும் சரி", என்று மற்றொரு அதிகாரி கூறியபொழுது, இவர்கள் மக்களுக்காக எதையும் நினைக்கும் நிலை இன்னமும் வர வெகு காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.


ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி! - தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி


Comments

Popular Posts