தமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய்...



உங்கள் வீட்டில் புற்றீசலாய், உணவில் புழுவாய், காற்றில் மாசாய், கண்  பார்க்கும் இடத்தில் எல்லாம் வீசி எறியப்பட்ட குப்பையாய், தமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய். இன்று நடந்த ஜனநாயக அநீதியை கண்டு கொதித்தெழும் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய 10 விஷயங்கள் -

1. அ. இ. அ .தி. மு. க. கட்சியை கடந்த ஆண்டு, இப்போது ஊர்ஜிதப்பட்டுள்ள தீர்ப்பு வழங்க பட்ட பின்னர்தான் நாம் தேர்ந்தேடுத்தோம். அப்போது நமக்கு இத்தகைய கோபம் ஏன் வரவில்லை?

2.  தனி நபர் பிம்பங்களுக்கு வோட்டு போட்ட நாம், எப்போதாதாவது வோட்டு வாங்கியவுடன் அந்த பிம்பம் மறைந்தால்  என்ன ஆகும் என்று சிந்திக்கவில்லை.

3.  இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் ஒரு கட்சி சேருவதை விரும்பாத நாம், நமது பல காட்சிகளிலும் குடும்ப பின்னணியிலேயே பலரும் தலைவராவதை என்றும் கண்டிக்கவில்லை.

4. நிலங்களையும், நீர் நிலைகளையும், தோட்டங்களையும், பல வணிக நிறுவனங்களையும், அடித்து நமது கண் முன்னே வாங்கும்போது கொஞ்சமும் அதை நாம் பெருகும் வன்முறை எனவும், அதனை தடுக்கும் விதத்தில் ஏதேனும் செய்யவேண்டும் எனவும் சிந்திக்கவில்லை, செயல்படவில்லை.

5. 300 ரூபாய்க்கு வோட்டு போட்டபோது இல்லாத சொரணை, 30 கோடிக்கு நமது எம்.எல்.ஏ. விற்கும்போது ஏன் வரவேண்டும். அல்லது அடுத்த நாட்களில் அதில் நமது பங்கு கிடைத்தவுடன் நிம்மதி அடைவோமா?

6. தமிழக மரபு என்று ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடி கோஷமிட்ட நாம் ஏன் நமது நமது தெரு பிரச்னைக்காகவோ, அல்லது ஊர் தேவைகளுக்காகவோ கோஷம் போட முயலவில்லை?

7.  இன்று ஜனநாயகத்திற்காக வெகுண்டு எழும் நாம் ஏன் நமது எம்.எல்.ஏ. க்களை கேள்வி கேட்கும் வழக்கத்தை கொள்ளவில்லை? நாம் இந்த பழக்கத்தை கொண்டிருந்தால், நமக்கு பதில் சொல்லவேண்டும் என்கின்ற பயம் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்திருக்கும் அல்லவா?

8. ஊழல் - நம்மில் எத்தனை பேர், நமது வேலைகளை சுலபமாக முடிக்க தேவையான ஊழல் பழக்கத்தை "கண்ணியமாக" கடை பிடிக்கின்றோம்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஊழல் அரசியல் வாதிகளை எதிர்த்து போராட முடியும்?

9.  ஊழல் வாதிகளின் ஆதிக்கம் நம்மை சுற்றி, நமக்கிடையே, வளரவிட்டு புலம்பும் நாம், அதனை எதிர்த்து நடக்கும் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளோம்?

10.  நாளை மறுநாள் காலை நாம் இன்றைய கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறோம்?

இந்த கேள்விகளை நாம் சிந்திக்க தவறினால், இன்றைய கோபம் பயனில்லாதது, பொழுதுபோக்கு.



Comments