The State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு!
The State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு!
தமிழகத்தில் அசாதாரண ஏற்றத்தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது - மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு இது.சென்ற மாதம், தமிழக மக்கள் தங்கள் அரசியல் பக்குவத்தையும், நாகரிகத்தையும், அறவழி போராட்டத்தின் வாயிலாக உலகமே வியக்கும் விதத்தில் நிரூபித்தனர். இன்று, கொஞ்சமும் அதற்க்கு சம்பந்தம் இல்லாத விதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதுவும், பெரும்பான்மையை ஆட்சி அமைக்கும் விதத்தில் தேர்நதெடுக்கப்பட்ட எம். எல்.ஏ. க்கள், தங்கள் அரசியல் நாகரிகமற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றனர்.
இந்த நாகரீக ஏற்றத்தாழ்வினை எவ்வாறு அகற்றுவது என்பது தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
Comments