தமிழக அரசியலுக்கு ஏன் ரஜினிகாந்த் வருவது நல்லதல்ல.... #2
தமிழக அரசியல்களம் அடுத்த வருடம் தேர்தலை நோக்கி நடைபோட துவாங்கிவிட்ட நிலையில். ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் நாம் எந்த விதத்தில் ஆராய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனக்கு தெரிந்தவரை, இன்று தமிழகத்தில் 3 முக்கிய விஷயங்களில் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது -- ஆராய்தல் அவசியமாகின்றது
1. இயற்கை வளங்களின் பாதுகாப்பு - இன்று தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை, மிக வேகமாக அழிந்துவரும் இயற்க்கை வளங்கள். பெரும் முதலீட்டுக்கு வாலை ஆட்டி இயற்க்கை வளங்களை கூறு போட்டு விற்கும் நிலையில் நாம் இல்லை. நடுவண் அரசாங்கம் எடுத்துள்ள eia போன்ற புதிய வரையாரைகளாகட்டும், ரோடு போட்டு வயலை அழிக்கிறேன், தொழிற்சாலைக்காக தண்ணிய சுரண்டறேன், வேலைவாய்புக்காக மாசு செய்றேன், சொற்ப எண்ணைக்காக ஆழ கிணறு தொண்டுறேன்.. என்றெல்லாம பொய் சொல்லி தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இனிமேல் ஏமாற்ற முடியாது.
சராசரி தமிழக மக்கள் இயற்கை வளங்களை அழிப்பத்தின் அபாயத்தை கடந்த ஆண்டுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்து இருக்கின்றனர். இதனை பற்றிய பரவலான அறிவும், அறிவியல் பூர்வமான விளைவுகளின் தாக்கம் குறித்த புரிதலும் தநிழகத்தில் இருக்கிறது.
2. அதிகார பகிர்வுகக்கு மரியாதை - அரசியல் சாசனப்படி , நடுவண் அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் பஞ்சாயத்து என்று மூன்று அடுக்குகள் கொண்ட அரசியல் அமைப்பு நமது நாட்டில் நிலவுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடுவண் அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில் அத்துமீறுவதும், மாநில அரசாங்கம் பஞ்சாயத்துகளை நிலைகுலய வைக்கும் நிலைக்கு தள்ளுவதும் அப்பட்டமாக நிகழ்ந்து வருகிறது. மக்கள் ஆட்சியில் இத்தகைய போக்கு அபாயகரமானது. இந்த போக்கை தடுத்து, நடுவண் அரசாங்கத்தின் இந்த போக்கை தேவைப்படும் பொழுது அழுத்தமாக எதிர்த்தும் செயல் படும் மாநில அரசு நமக்கு மிகவும் முக்கியம். அதே சமயத்தில், உள்ளாட்சிகளின் பணியில் முட்டுக்கட்டை போட்டு அவற்றை வேலைசெய்ய விடாமல் தடுக்கும் போக்கையும் மாநில அரசாங்கம் நிறுத்த வேண்டும். இத்தகைய அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்கும் எந்த கட்சியியும் மக்கள் ஆதரிக்கலாம்.
3. ஊழலின் ஊற்றுக்கண் தலைமை - வெட்கமில்லாமல் ஊழல் செய்வதை ஒரு கலாச்சாரமாக்கிவிட்ட ஆட்சியாகவே இந்த ஆட்சி வரலாற்றில் குறிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் அனைத்து நிலைகளிலும் அரசியல் ஆட்களை நியமிப்பது, அவர்களைக்கொண்டு சின்ன சின்ன செலவுகளில்கூட, பர்சென்டேஜ் கணக்கு பார்த்து எடுத்துக் கொள்வதனை வெளிப்படையாகவே இந்த ஆட்சி செய்துள்ளது தினம் செய்திகளில் வருகிறது. ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டு வரும் பொழுதும், அதனை வெட்கமின்றி நியாயப்படுத்துவது இவர்களது செயல்பாட்டின் அனுதினம் நிகழ்வு. இதனை தட்டிக்கேட்க துணிவும் தார்மீக தெளிவும் இல்லாத எதிர்க்கட்சிகள் இன்று அமைந்துள்ளது, நமது சாபக்கேடு. ஆனால் அறப்போர் போன்ற தன்னார்வலர்கள் அவ்வப்போது எழுப்பும் குற்றச்சாட்டுகளால் நமக்கு எந்த அளவிற்கு இந்த ஊழல் கலாச்சாரம் பாரவலாகியிறுக்கின்றது என்று விளங்குகிறது.
இதனை எல்லாம் மனதில் கொண்டு தான் நாம் எந்த ஒரு கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும், தேவையாயும் ஆராயவேண்டும். இது முக்கியம்.
ஆனால் அதைபடிக்க நீங்க வரல, ரஜினிகாந்த் பேர் பாத்துட்டு கிளிக் செஞ்சிருந்தா, இப்போ முதல் கட்டுரைக்கு இங்கிருந்து போங்க..
Comments