சூரரை போற்று...

 ஒரு படத்தை பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு செய்கிறேன். தமிழில் இத்தகைய ஒரு படத்தை  பார்ததில் சத்தோஷம். இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் புது தொழில் தொடங்குவது, அதனை நிர்வாகிப்பது எப்படி என்பதை சிறு ஊர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வரும் பலருக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இந்த படம் எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளது என்று கூறுவேன். 


இரண்டு காரணங்களுக்காக இந்த படம் இந்த தருணத்தில் முக்கியமானதாக கருதுகிறேன் -


1. தமிழகத்தில் பரவலாகவே வியாபாரத்தில் ஈடுபடும் சமூகங்களைத் தவிர இதர சமூகங்களில் பெரும் அளவு கனவுகளுடன் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபட ஏதுவான சூழல் இல்லை. இளைஞர்கள் தங்கள் சொந்த தொழில் தொடங்கும் கனவுகளை மூட்டை கட்டிவிட்டு, எந்த மந்திரியோ அல்லது எம். எல். ஏ. சொந்தக்காரனையோ பிடித்து காசு கொடுத்து அரசாங்க வேலை வாங்கி 'செட்டில்' ஆகவேண்டும் என்னும் அட்வைஸ் அதிகமாக இன்றும் சிறு ஊர்களிலும் கிராமங்களில் 'நிதர்சனம்' என்று நினைக்கும் பெறுசுகள் அதிகம். 

இந்த சூழலை உடைக்க, பெரும் கனவு கொண்டு இளைஞர்கள், விடாமுயற்சியில் பயணித்தால் வெற்றி கிட்டும் என்னும் மெசேஜ் இந்த படம் கொடுக்கிறது. இதற்க்கு முன்னதாக ஜோதிகா நடித்த 36 வயதினிலே என்கின்ற படத்தை நாங்கள் பல முறை இயற்க்கை உணவை பற்றி மாதிரம் அல்லாமல், பெண்கள் நினைதால் தொழில் தொடங்கலாம் என்பதாரக்காகவும் பல கிராமத்து பெண்களுக்கு போட்டு காட்டி இருக்கிறோம். 


2. லோ கோஸ்ட்  ஏர்லயன்  - நான் டெக்கான் ஏர்லயனில் பறந்தவன். இன்றும் குறைந்த செலவில், குறைந்த ஆடம்பரங்களுடன், சிறு ஊர்களுக்கு நமது நாட்டில் வணிக வர்த்தகதிர்க்கும், சுற்றுலாவிர்க்கும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் லாபகரமாகவே இயங்கலாம் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. பல காலம், இந்த நம்பிக்கையை பலரிடம் தெரிவிதிருக்கிறேன். தமிழகத்தில் முழுகக சுய உதவி குழு பெண்களாலான ஒரு விமான கொம்பனி, ஹெலிகொப்டர் மற்றும் ஜெபலின் பறக்கலாம் என்னும் கனவும் எனக்கு உண்டு. அதறக்கான மார்க்கெட் நம்மிடயே உருவாகி பலகாலம் ஆகிவிட்டது என்று நம்பும் மிக சிலரில் நானும் ஒருவன். இந்த ஐடியாவை யாரிடம் சொன்னாலும் ஏதோ கனவு என்றும் தேவைக்கு அதிக நம்பிக்கை என்றும் எண்ண கூடும். ஆனால் இது உண்மை. இந்த கனவை சார்ந்து இருப்பதால் இந்த படம் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. 

  



Comments

Popular Posts