புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் ஒரு நிகழ்வு...
பொதுவாகவே, தமிழகத்தில் ஆசிரமங்கள் மற்றும் மடங்களை ஒரு சந்தேகக்கண்ணோடு நோக்கும் போக்கு நிலவி வருகின்றது.
இந்த சந்தேக கண்ணோட்டத்தை முன்வைத்து, அரசியல் செய்யும் கட்சிகள் ஊழலின் உச்சகட்டத்தை தொட்டிருந்தாலும், அவர்கள் அதற்காக கொஞ்சமும் கூச்சமின்றியும், முழுமையாக எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமலும், தங்கள் துவேஷத்தை ஆச்ரமங்களின்பால் செலுத்த மற்றொரு சந்தர்ப்பமாகவே இத்தகைய நிகழ்வுகளை பயன்படுத்துகின்றன.
புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆஸ்ரமம், அரவிந்தர் மற்றும் அன்னை வாழ்ந்த காலத்தில் நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. பாண்டிச்சேரியை மரியாதையுடனும், பக்தியுடனும் சாமானியர்கள் பலர் இன்றும் வந்து செல்வதற்கு இந்த ஆஸ்ரமம் ஒரு முக்கிய காரணம்.
பொதுவாகவே இத்தகைய மதிக்கத்தக்க நிறுவனங்களில் என்தவித சர்ச்சை நடைபெறாமல் செயல்படுவது சாத்தியமில்லை. ஆனால், இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் பொழுது, அதனை எங்கனம் அந்த சமூகம் அணுகுகின்றது என்பது அந்த சமூகத்தின் நிலவும் பெரும்பான்மை கலாசாரத்தை குறிக்கின்றது.
இன்று ஒரு கட்சியின் தலைவர் ஊழல் குற்றத்திற்காக சிறை செல்வதையோ, அல்லது மற்றொரு தலைவரின் எல்லா குடும்பத்தினரும் பல்வேறு குற்றத்திற்காக நீதிமன்றம் செல்ல நேர்ந்தாலோ, அதனை கொஞ்சமும் பிரக்ஞை இன்றி ஏற்கும் தமிழ் சமூகத்தின் சில சக்திகள், ஏனோ, ஆன்மீக நிறுவனங்களின் மிக சிறிய செயல்பாட்டு குறைகளைகூட மிகைபடுத்தி குறைகூறி வருவது வழக்கமாகயுள்ளது .
இந்த நிகழ்வு குறித்து எனக்கு எந்த விதமான பின்புலமும் தெரியாது, தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. ஆனால் ஆன்மீக நிருவனங்களின்பால் மக்கள் மத்தியில் பொதுவாக நிலவும் நம்பிக்கையை என்றும் குறைகூறி அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, இந்த சமூகத்தில் கொஞ்சமேனும் நம்பிக்கை தரும் சில நிறுவனங்களை கீழிழுக்கும் போக்கை நிச்சியமாக கண்டிக்கவேண்டும் என்பது என் நிலை.

Comments