கடைக்காரனுக்காக தக்காளி விஞானம்..
"வீட்டிலேயே இருக்குற கூர்மையான கத்திய வச்சி நறுக்கறேன், இருந்தாலும் இந்த தக்காளி தோலு அப்படியே leather மாதிரி வழுக்குது", வீட்டுக் காரம்மா மீண்டும் இன்று கடையில் வாங்கும் தக்காளி குறித்து குமுறிக் கொண்டிருந்தார். கரோனா காலத்தில் பக்கத்து கோலனி இயற்கை அங்காடி போய் காய் வாங்க முடியவில்லை என்பதால், அருகாமயில் இருக்கும் கடையில் மிகவும் சிவப்பாக இருக்கும் "நாட்டு தக்காளி" நான் lockdown ஆரம்பிக்கும் முன்னர் ஒரு வாரத்திற்கு சேர்ந்து வாங்கி வந்தது நினைவுக்கு வந்தது. முன்பெல்லாம் ''நாட்டு தக்காளி'' கொஞ்சம் மட்டமான சிவப்பில், பசுமையும் மஞ்சளும் சேர்ந்து இருக்கும், புளிப்பு அதிகமாக இருக்கும், காய் கொஞ்சம் சிறிதாக இருக்கும். இதற்கு மாறாக ''பெங்களூரு'' தக்காளி எல்லாம் ஒரே மாதிரி குண்டாகவும், அதிக சிவப்பாகவும், தோல் பருமாநாகவும் இருக்கும். இப்போதெல்லாம் ரெண்டும் ''பெங்களூரு'' தக்காளி போலத்தான் இருக்கு. விதியாசமே தெரியல. கடந்த சில நாட்களாக வீட்டில் இந்த தக்காளி பேச்சு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. "மூணு விசில் விட்டும் தக்...